சென்னை : மோகன்லால் முதல் பார்த்திபன் வரை இந்த ஆண்டு "கோல்டன் விசா" பெற்ற சினிமா பிரபலங்களின் லிஸ்டை இந்த பதிவில் பார்ப்போம்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கோல்டன் விசா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசு.
வெப் சீரிஸ் பக்கம் கமல் பட இயக்குனர்.. தயாரிக்கப் போகும் ராதிகா.. நடிப்பு யார் தெரியுமா?
முக்கியமான பிரமுகர்கள்
குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களையும் ஈர்க்கும் வகையில் ஐக்கிய அமீரகத்தால் கொண்டுவரப்பட்டது தான் கோல்டன் விசா. இந்தியாவின் முக்கியமான விளையாட்டு வீரர்கள், பிரமுகர்கள், காவல்துறை சேர்ந்த பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகின்றன. பத்து வருடங்கள் வரை ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்த கோல்டன் விசா. இதை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள். இது கோல்டன் விசாவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் போதுமானது.
சயின்ஸ் ஃபிக்ஷன்.. அம்மா - மகன் பாசம்.. சூர்யா வெளியிட்ட 'கணம்' டீஸர் !
மோகன்லால்
மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு மிகப்பெரிய கௌரவமான கோல்டன் விசாவை துபாய் அரசாங்கம் கொடுத்தது. ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த ஆண்டு இவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. அதன் பிறகு டோவினோ தாமஸ் இந்த கோல்டன் விசாவை பெற்றார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் இந்தக் கௌரவத்தை பெற்றார். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் திரையிலும் இவர்கள் தங்களுக்கென்று தனி இடத்தை பெற்று இருக்கும் நான்கு பேருக்கும் கோல்டன் விசா கிடைத்தது, ரசிகர்களை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்னணி பாடகி
இவர்களை தொடர்ந்து, 14 மொழிகளில், 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி சித்ராவுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. பின்னணி பாடகி ஒருவர் இந்த மிகப்பெரிய கௌரவத்தை பெற்றது அவரது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது.
அதன் பிறகு, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்க கூடிய நடிகை த்ரிஷா இந்தக் கௌரவத்தை பெற்றார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை ரசிகர்களிடம் பகிர்ந்தார். அதை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் கோல்டன் விசாவை பெற்றார். இதை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.