LATEST: வைரலாகும் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் கொல மாஸ் போஸ்டர்!!! சும்மா தீய்யா இருக்கு !!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'த்ரிஷ்யம் 2' படத்திற்குப் பிறகு, மலையாள சினிமாவில் மோகன்லால் நடிக்கும் படம் 'ஆராத்து'

இந்த படத்தை பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார், உதயகிருஷ்ணா எழுதியுள்ளார். 'ஆராத்து' படத்தில் மோகன்லால் நெய்யாட்டின்கார கோபன் வேடத்தில் நடிக்கிறார். சரியான மாஸ் மசாலா - நகைச்சுவையை மையமாகக் கொண்ட சிறந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது.

கோபன் ஒரு நோக்கத்துக்காக நெய்யாற்றின்கரையிலிருந்து பாலக்காட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார்; அவர் பாலகாட்டுக்கு வந்த பின் அடுத்தடுத்த  நடைபெறும் நிகழ்வுகளே இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு தவிர, படத்தின் சில பகுதிகள் ஹைதராபாத்திலும் படமாக்கப்படுகின்றன.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர். மற்ற நடிகர்களாக நெடுமுடி வேணு, சாய்குமார், சித்திக், விஜயராகவன், ஜானி ஆண்டனி, இந்திரன்ஸ், ராகவன், நந்து, பிஜு பாப்பன், ஷீலா, ஸ்வாசிகா, மாளவிகா மற்றும் ரச்சனா நாராயணன்குட்டி நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவு: விஜய் உலகநாத், எடிட்டராக: சமீர் முகமது. இசைக்கு: ராகுல் ராஜ். கலை இயக்குனராக: ஜோசப் நெல்லிக்கல். ஆடை வடிவமைப்பு: ஸ்டெஃபி சேவியர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் மற்றுமொரு மாஸான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  இந்த படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு வேலை செய்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Mohan lal Aaraattu movie new onam poster released

People looking for online information on Aaraattu, Mohan Lal, Shraddha Srinath will find this news story useful.