சோழர் வரலாற்றை மையமாக வைத்து புதிய படம்.. ஆசையை வெளிப்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மோகன் ஜி, சோழர் கால வரலாற்றை படமாக்குவது குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "யாருய்யா நீங்க".. விக்னேஷ் சிவன் TWITTER பக்கத்தில் நடந்த சம்பவம்.. கடுப்பாகி போட்ட பதிவு!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G. ஜி.

இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார்.

சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM  நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குனர் மோகன் ஜி-க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார். மேலும் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிகழ்வில் இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதில், "சோழர் வரலாற்றில் நடந்த ஏதேனும் ஒரு சிறிய சம்பவத்தை, சிறிய பொருட்செலவில் இரண்டு மணி நேர திரைப்படமாக எடுக்க ஆசை.. வரலாற்று ஆவணங்களுடன் சேர்ந்த நிகழ்வோ அல்லது கற்பனை கதையாகவோ உங்களிடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நிச்சயம் அதற்கான அங்கிகாரம் தரப்படும்.. Gmfilmcorporation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..." என கூறியுள்ளார்.

Also Read | செம்ம ஸ்டைலான புது லுக்கில் LEGEND சரவணன்.. வைரல் ஃபோட்டோ.. அடுத்த படத்துக்கா..?

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G Facebook Post about Movie about Chozha Dynasty

People looking for online information on Chozha Dynasty, Mohan g, Mohan G Facebook Post will find this news story useful.