பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மோகன் ஜி. இதற்கடுத்து திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
Also Read | Pa. ரஞ்சித்துடன் Facebook-ல Chat பண்ணிய மோகன் ஜி.. அவரே சொன்ன தகவல்.
பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் இயக்குனர் மோகன் ஜி அளித்துள்ளார். அதில், தனது சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்த பேட்டியில் தான் பெண்கள் கல்லூரி ஒன்றில் சமீபத்தில் பெண்கள் DP வைக்க கூடாது என்பது பற்றி மோகன் ஜி பேசிய கருத்து பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுபற்றி பேசிய மோகன் ஜி, "அதோட முன்னாடியும், பின்னாடியும் என்ன பேசுனேன்னு பார்க்கணும். அதை அழகா கட் பண்ணி சின்ன வீடியோவா போட்டாங்க. உங்க குடும்பத்தோட இல்ல, உங்க பிரண்ட்ஸோட எடுத்த போட்டோ DP ஆ வைங்க. இல்லன்னா உங்க நார்மல் போட்டோவை DP ஆ வைங்க. உங்கள ரொம்ப அழகா பார்த்த உடனே உங்களை டார்கெட் பண்ற வகையில் வைக்காதீங்க. உங்களை டார்கெட் பண்ண வாய்ப்பு இருக்கு. அதனால DP போட்டோ கொஞ்சம் கவனமாக வைங்கன்னு சொன்னேன். வைக்காதீங்கன்னு நான் சொல்லல" என தெரிவித்தார்.
தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஒரு டிபி வைப்பது என்பது நமக்கு தெரிந்த காண்டாக்ட் உள்ள நபர்களுக்கு தான் பார்க்கிறார்கள் அப்படி இருக்கும் போது நீங்கள் சொன்னது சுதந்திரத்தை பறிப்பது போல் இருப்பதாக நெறியாளர் திருப்பி கேள்வி எழுப்ப இதற்கு விளக்கம் கொடுத்த மோகன் ஜி, "நான் சொன்னது பேஸ்புக்ல. இன்ஸ்டால கூட Avoid பண்ணுங்கன்னு சொன்னேன். நார்மலா ப்ரொஃபைல் பிச்சர்னு சொன்னேன். இங்க அனுபவிக்கிறவங்களுக்கு தெரியும். யாரோ ஒருத்தன் வந்து இன்னைக்கு நான் ஒரு பொண்ணு கிட்ட பேசியே ஆகணும்ன்னு முயற்சி பண்றான். அப்படி நினைக்கிறவன் முதல்ல பேஸ்புக்ல ஒரு பொண்ணு ப்ரோபைல் பார்த்து அதில் இருக்கிற ஃபோட்டோவை பார்க்க நினைப்பான். அதுதான் நான் மீன் பண்ணுது" என தெரிவித்தார்.
இதன் பின்னர், "ஒரு பொண்ணு இந்த போட்டோ எடுக்குறாங்க, அதை அந்த பொண்ணு கிட்ட வைக்க வேணாம்னு சொல்லனுமா இல்ல பசங்கள போயிட்டு நீங்க கரெக்டா இருந்துக்கங்க அந்த பொண்ணு போட்டோ வச்சா அது அவளோட சுதந்திரம்னு சொல்லணுமா?" என்ற கேள்வி எழுப்பிய நெறியாளர் இதுபற்றி செல்வராகவனிடம் பேசியதையும் குறிப்பிட்டு இருந்தார்.
இது பற்றி விளக்கம் கொடுத்த மோகன் ஜி, " யாரோட சுதந்திரத்தையும் பறிக்கல. இப்ப நான் போய் பசங்க கிட்ட யாருக்குமே பொண்ணுங்க கிட்ட பேசாதீங்க அப்படின்னா, பையன் வந்து பொண்ணுங்ககிட்ட பேசக் கூடாதான்னு கேப்பீங்க. கொஞ்சம் பாதுகாப்பா இருக்கணும்ங்குறது தான் இதோட மீனிங். நீங்க சுதந்திரத்தை விட்டு குடுங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது அரெஸ்ட் பண்ணிடுவாங்க. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு நாடு இது" என மோகன் ஜி குறிப்பிட்டார்.
Also Read | இறப்புக்கு முன்.. டிரம்ஸ் சிவமணியுடன் மயில்சாமி பேசிய ஆடியோ.. மனதை கலங்கடிக்கும் பின்னணி!!