தாதா 87, பவுடர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ, அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம், 'ஹரா'.

சிபிராஜ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் புதிய படம்... சென்சார் போர்டு கொடுத்த ரிப்போர்ட்!
80'ஸ் மற்றும் 90'ஸ் காலகட்டங்களில், தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் மைக் மோகன் தான் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
ஏராளமான ரசிகர்களுக்கு, ஒரு காலத்தில் ஃபேவரைட்டாக இருந்த நடிகர் மோகனின் ரீ என்ட்ரி, பலரையும் குதூகலப்படுத்தியுள்ளது.
கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம்
அது மட்டுமில்லாமல், ஏற்கனவே வெளியான இன்னொரு தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருந்தது. அதாவது நடிகை குஷ்பூ இந்த படத்தில் நடிக்கவுள்ளது தான். ஒரு காலத்தில், ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் அதிகம் கவர்ந்து இழுத்த குஷ்பூ, கடைசியாக ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
முதல் முறையாக..
இதனையடுத்து, மைக் மோகனுடன் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஹரா திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் விஜய் ஸ்ரீ, "இதுவரை மோகன் மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் தமிழில் இணைந்து நடித்ததில்லை. இவர்களுக்கு இடையிலான இளம் வயது கதை சொல்லப்பட்டுள்ளதால், இப்படம் ஒரு 80ஸ், 90ஸ் நாஸ்டால்ஜியாவையும் தொட்டுச் செல்லும். பலரும் மோகன் சாரை மெலோடி நாயகனாக பார்த்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேறு ஒரு ஆக்ஷன் நாயகனாக பார்ப்பார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
டைட்டில் டீசர் அப்டேட்
முன்னதாக, ஹரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஹரா திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகனை பல ஆண்டுகளுக்கு பிறகு, திரையில் பார்க்க இருக்கும் ரசிகர்கள், டைட்டில் டீசரில் மோகனின் லுக் எப்படி இருக்கும் என்பதைக் காணவும் அதிக ஆவலுடன் உள்ளனர்.
அடடே..! "பாக்குற நமக்கே அள்ளு விடுதே..".. பிரபல நடிகையின் ஸ்கை டைவிங் சாகசம்.. 'வீடியோ'