பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய என்ட்ரியாக மீரா மிதுன் நுழைந்துள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் அன்றைய தினமே 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பலரின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர்களில் பெரும்பாலானோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டனர்
அந்த 15 பேரும் ஏதோ ஒரு விதத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, நடிகர் சரணவன், இயக்குநர் சேரன், நடிகை மதுமிதா, சாக்ஷி அகர்வால், லாஸ்லியா, அபிராமி, ஷெரின், ரேஷ்மா, வனிதா, கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் ஆவார்.
வைரலான பட்டியலில் மிஸ்ஸானது, நடிகர்கள் மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை கஸ்தூரி மட்டுமே. இந்நிலையில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியின் போது தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் 17 பேரின் பெ யர் கொண்ட கார்டுகள் உள்ளது என்றார்
இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மீரா மிதுனும் மாடல் என தெரிகிறது. நேற்று வெளியான ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் யாரோ நியூ என்ட்ரி என்பது தெரிந்த இதனால் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அது மீரா மிதுன் என உறுதியாகியுள்ளது