கமல்ஹாசன் உடல்நிலை .. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன், அண்மையில் அமெரிக்க பயணம் சென்று திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

Advertising
>
Advertising

அதில் அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி ஆனது. இதனையடுத்து அவர் சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சுவாசப் பாதை தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிக்கையை அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

இதனிடையே கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தமது தந்தையின் உடல் நலம் தேறி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த தகவலை, அக்கட்சியின் துணைத்தலைவர் திரு. A.G.மௌர்யா IPS (ஓய்வு), அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், “திரு கமல் ஹாசன் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நல்ல முறையில் தேறி வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வரவேண்டும் என அவருக்காக, பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி. நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருடைய உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனை, நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

MNM Vice president announced Kamal Haasan Health update

People looking for online information on Kamal Haasan, Kamal hassan will find this news story useful.