”நெஞ்சுக்கு நீதினு படத்தோட பேர சொன்னதும்… அப்பா ரியாக்ஷன் என்ன?”- உதயநிதி ஸ்டாலின் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா… பிரபல ஓடிடியில் நேரடி வெளியீடு… Title உடன் வெளியான firstlook!

அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜய்யின் குருவி மற்றும் சூர்யா நடித்த ஆதவன் படங்களை தயாரித்த அவர், ஒரு கல் ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

நெஞ்சுக்கு நீதி…

தற்போது இயக்குனர் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது.

Exclusive நேர்காணல்

இந்நிலையில் திரைப்படம், திரைப்பட விநியோகம் மற்றும் அரசியல் என பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தான் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி, மாமன்னன், அரசியல் வாழ்க்கை, தொடர்ந்து பல படங்களை வாங்கி வெளியிடுவது குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஸ்டாலின் ரியாக்ஷன்…

நெஞ்சுக்கு நீதி என்ற தனது தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் பெயரை தனது படத்துக்கு வைத்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “இந்த தலைப்பை இயக்குனர் அருண் ராஜாதான் பரிந்துரைத்தார். அதைக் கேட்டதும் நான் முதலில் அதிர்ச்சியானேன். ஆனால் அவர் ‘இந்த படத்துக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வைக்க முடியாது’ எனக் கூறினார். ஆனாலும் நான் என் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரிடமும் இதுபற்றிக் கேட்டுவிட்டுதான் சொல்வேன் எனக் கூறினேன். இதுபற்றி என் அப்பாவிடம் சொன்னபோது அவர் ‘என்ன படம், எதுவும் தப்பான படத்துக்கு வைத்துவிடாதீர்கள்’ எனக் கூறினார். நான் அவரிடம் ‘இல்லப்பா… நல்ல படம்தான். தேசிய விருது வாங்குன படம்’ என்று கூறியதும் ஒத்துக்கொண்டார்’ எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”நெஞ்சுக்கு நீதினு படத்தோட பேர சொன்னதும்… அப்பா ரியாக்ஷன் என்ன?”- உதயநிதி ஸ்டாலின் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

MK Stalin reaction on Nenjukku neethi title

People looking for online information on MK Stalin, MK Stalin reaction on Nenjukku neethi, Nenjukku neethi, Udhayanidhi Stalin will find this news story useful.