போடு.! மாதவனை இயக்கும் பிரபல தனுஷ் பட இயக்குநர்..! செம காம்போ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம், கடந்த ஆண்டின் பிளாக்பாஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறி இருந்தது.

அதே போல, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் நான்காவது முறையாக மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்திலும் தனுஷ் நடித்திருந்தார். மேலும் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பாரதிராஜா, பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். திருச்சிற்றம்பலம் திரைப்படம், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த ஒரு ஃபீல் குட் படமாக உருவாகி இருந்த சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த படத்தை ரசிக்கவும் செய்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners

திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதன் காரணமாக, மித்ரன் ஆர் ஜவஹர் அடுத்து இயக்கும் திரைப்படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. மேலும், அவரது அடுத்த படத்தில் யார் கதாநாயகனாக இருப்பார் என்பது குறித்த தகவலை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர்.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், மித்ரன் ஆர் ஜவஹர் அடுத்து இயக்க உள்ள திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளி வந்துள்ளது.  தனுஷ்ஷை இயக்கி இருந்த மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் மாதவன் நாயகனாக களமிறங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் குளோபல் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கின்றது.

தொடர்புடைய இணைப்புகள்

Mithran R jawahar next movie after thiruchitrambalam

People looking for online information on Dhanush, Madhavan, Mithran Jawahar, Thiruchitrambalam will find this news story useful.