“MISS YOU பாலு UNCLE!”.. எஸ்பிபி பிறந்த நாளில் டி.இமான், வெங்கட் பிரபு உருக்கம்! THROWBACK PICS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த பாடகர் பத்ம விபூஷன் திரு. எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இன்று 75வது பிறந்த நாள் (1946). தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

சென்ற 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பிபி , சென்ற 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

பலரையும் இவருடைய இழப்பு சோகத்தில் ஆழ்த்தினாலும் தம் பாடல்கள் மூலம் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் தான் இயக்குநர் வெங்கட் பிரபுவும், இசையமைப்பாளரும் டி. இமானும் எஸ்பிபியின் இன்றைய பிறந்த நாளில் அவருடனான புகைப்படத்தை பகிர்ந்து தங்கள் நினைவலைகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இதேபோல் எஸ்பிபியுடனான புகைப்படத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் டி.இமான், “லெஜெண்ட் பாடகர் எஸ்.பி.பி அங்கிளை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். உங்கள் மேஜிக்கல் வாய்ஸ் இறுதிவரை எங்கள் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்! மிஸ் யூ…” என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அண்மையில் காஜல் அகர்வால் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். இந்த சீரிஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது. 

இதேபோல் இசையமைப்பாளர் டி.இமான் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.  

ALSO READ: நவரசா ரிலீஸ் எப்போ? ட்வீட் மூலம் அப்டேட் .. கௌதம் மேனன் படத்தின் பிரபல டெக்னீசியன்!

தொடர்புடைய இணைப்புகள்

Miss You uncle Says Imman Venkat Prabhu SPB Birthday

People looking for online information on D. Imman, SP Balasubramaniam, Sp Balu, Venkat Prabhu will find this news story useful.