குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் புகழ் மற்றும் மணிமேகலை.

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் அதில் குக் வித் கோமாளி அனைவரும் பார்க்கக் கூடிய நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இதில் பங்கேற்கும் குக் மற்றும் கோமாளிகளுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டனர். அஸ்வின், சிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா, சரத், சுனிதா, ஷகிலா, ரேகா, கனி, பாபா பாஸ்கர், ரக்ஷன், தாமு மாஸ்டர் மற்றும் வெங்கடேஷ் பாத் மாஸ்டர் என அனைவருமே இந்த நிகழ்ச்சியின் கலகலப்புக் காரணம்.
சிரிப்புக்கும் எண்டர்டெயின்மெண்ட்டுக்கும் உத்திரவாதம் தரும் இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் அண்மையில் தான் கனி ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகியுள்ளர். இந்நிகழ்ச்சியில் தனக்கே உரிய அட்ராசிட்டியால் அனைவரின் செல்லப்பிள்ளையாகவும் மாறிய புகழ் தற்போது மணிமேகலையை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணம் அண்மையில் மணிமேகலைக்கு நடந்த ஒரு சிறிய விபத்து தான். இதனால் 2 வாரம் தன்னால் குக் வித் கோமாளிக்கு வரமுடியாது என்றும் அப்படி வரவில்லை என்றாலும் இனி வரக்கூடிய எபிசோட்களில் பயங்கரமாக Fun பண்ணியிருப்பதாகவும் ரசிகர்கள் தன்னை மிஸ் செய்ய வாய்ப்பில்லை என்றும் மணிமேகலை சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தான் ரசிகர்களுடன் சேர்ந்து புகழும் ‘உன் நியாபகம் தான் செல்லம் வருது. மிஸ் யூ’ என குறிப்பிட்டுள்ளார். அதற்கு ‘மிஸ் யூ டூ டா.. எல்லாரையும் நானும் மிஸ் பண்றேன். சீக்ரம் வந்துடுறேன்’ என மணிமேகலையும் பதிலொன்றை பகிர்ந்துள்ளார்.
ALSO READ: "தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டால் என்ன?".. கர்ணன் இயக்குநர் பரபரப்பு அறிக்கை!