'கோப்ரா' இசை வெளியீட்டு விழாவில் அசத்திய மிருணாளினி.. மாடர்ன் உடையில் செம போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் வேளச்சேரியில் உள்ள தனியார் மாலில் நடந்தது.

Advertising
>
Advertising

Also Read | கார்த்தி நடிக்கும் "சர்தார்".. கர்நாடக உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! முழு விபரம்

விக்ரம் நடிப்பில் இந்த 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார்.  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். 

இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விக்ரம், துருவ், ஶ்ரீ நிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, ஏ‌.ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் லலித், இயக்குனர் அஜய் ஞானமுத்து, வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் MLA கலந்து கொண்டனர்.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மூன்று பாடல்கள் போக   மேலும் 2 பாடல்கள்  12.07.2022 அன்று வெளியான ஆல்பத்தில் இடம்பெற்றன. கவிஞர் தாமரை எழுத்தில், சர்தாக் கல்யாணி பாடிய தரங்கினி எனும் ஒரு காதல் பாடலும் &  பா. விஜய் எழுத ரக்ஷிதா சுரேஷ் பாடிய "ஏலே இளஞ்சிங்கமே" எனும் தாலாட்டு பாடலும் வெளியானது.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை மிருணாளினி இசை வெளியீட்டு விழாவில் மாடர்ன் உடையில் வருகை புரிந்துள்ளார். மேலும் விழாவுக்கு முன்பு பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல டாப் போட்டோகிராஃபர் கிரண் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

நடிகை மிருணாளினி, ஏற்கனவே தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் டிக் டாக், டப்மாஷ் போன்ற இணைய பயன்பாட்டு மென்பொருள்களில் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Also Read | AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. அஜித் போட்டோவுடன் வெளியான செம தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Mirnalini Ravi Latest Photoshoot for Cobra Movie Audio Launch

People looking for online information on Cobra movie, Cobra Movie Audio Launch, Mirnalini Ravi, Mirnalini Ravi Latest Photoshoot, Vikram will find this news story useful.