THUNIVU: மகனுடன் பிரபல தியேட்டரில் 'துணிவு' படம் பார்த்த ஆந்திரா அமைச்சர் ரோஜா.. வைரல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமைச்சர் ரோஜா தனது மகனுடன் துணிவு படத்தை தியேட்டரில் கண்டு களித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "நண்பகல் நேரத்து மயக்கம்.. தமிழ் படமா? மலையாள படமா?".. செம்ம ஜாலியாக பேசிய மம்மூட்டி!

ரோஜா

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மல்லிகா என்ற ஒரு மகள் மற்றும் கிருஷ்ண கௌசிக் என்ற ஒரு மகன் உள்ளனர். 16 வயதாகும் ரோஜாவின் மகன் கிருஷ்ண கௌசிக் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக  தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

துணிவு

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த படம் 'துணிவு'.

பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள SJ சினிமாஸ் திரையரங்கில் மகன் கிருஷ்ண கௌசிக் உடன் இணைந்து அஜித்குமாரின் 'துணிவு' திரைப்படத்தை அமைச்சர் ரோஜா கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை திரையரங்க உரிமையாளரும் துணிவு படத்தின் வினியோகஸ்தருமான வருண் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read |பிக்பாஸ்-ல இருந்து வெளியேறும்போது கதிர் சொன்ன வார்த்தை.. கலங்கிப்போன போட்டியாளர்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Minister Roja watched Ajith Kumar Thunivu Movie in Nagari

People looking for online information on Ajith Kumar, Minister Roja, Minister Roja watched Thunivu Movie, Roja, Thunivu will find this news story useful.