தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் மகேஷ்பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர். இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அன்பே ஆருயிரே இசை, மருதமலை, லீ காளை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா.
இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஜூனியர் என்டிஆர் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார். இதனையடுத்து ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் அவரை மோசமான வார்த்தையினால் பேச ஆரம்பித்துவிட்டனர். மனமுடைந்த அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனாலும் சில ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் மற்றும் பலாத்கார மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் அவர் ஐடி மற்றும் தொழிற்சாலை துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் முன்னாள் நிஜாம் பாத் எம்.பி கவிதா ஆகியோரை டேக் செய்து "போலீசாரிடம் இதுகுறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளேன். தீர விசாரித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமராவ் "மேடம் உங்களது வழக்கு பற்றி தெலங்கானா டிஜிபியிடம் பரிந்துரை செய்துள்ளேன். இது குறித்து சட்டத்தின்படி சரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.