நடிகை கஸ்தூரி அவ்வப்போது தம்முடைய சமூக வலைப் பக்கங்கள் மூலமாக கருத்துகளை வெளிப்படுத்தி கொண்டிருப்பார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது ஒரு புதிய வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
அதில், “அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டுக்கு இன்ஸ்டாவில் தோன்றியவள், இப்போதுதான் வருகிறாள். உடல்நிலை ஏதேனும் சரியில்லையா? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். உடல் நிலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மனசு நல்லா இல்லை. இந்த கொரோனா காலத்தில் நிறைய இழப்புகளை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் . என் தொழில், வீடு, சுற்றம் ,உற்றார், உறவினர், நண்பர்கள் வட்டத்தில் நிறைய இழப்புகள்.
இன்னொருபுறம் தனிப்பட்ட முறையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது இன்னும் சில மனக் குழப்பங்களை ஏற்படுத்தியது. அத்துடன் வீட்டில் இருக்க முடியாமல் தினமும் படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருக்கிறேன். அது மிகவும் டென்ஷனாகவும் பயமாகவும் இருக்கு. எல்லார் வீட்டிலும் கடினமான இந்த சூழ்நிலையில் நான் புகைப்படங்கள் மற்றும் சமையல் செய்யும் விஷயங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. அவற்றை பதிவிட ஆரம்பிக்கலாமா? என்கிற ஆலோசனையை சொல்லுங்கள்.
இன்னொன்று இந்த மாதம் நான் சந்தித்த நிறைய மன அழுத்தங்கள், பிரச்சினைகள் உள்ளிட்டவற்றிலிருந்து வெளிவருவதற்கு உங்களுடைய அசைக்க முடியாத அன்பும் ஆதரவும் தந்த நம்பிக்கையால் தான். எனவே உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு நான் தோள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . எனவே உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் யாரிடமும் சொல்ல முடியாத கவலைகள் இருந்தாலும் அவற்றை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் நாம் சேர்ந்து பேசினால் அவற்றுக்கு ஏதேனும் ஒரு தீர்வு கிடைக்கும்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.