இன்ஜினியராக இருந்து பொருளாதார நிபுணராக மாறிய சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். அதில் அவர் தான் டிக்டாக்கிலிருந்து வெளியேறப் போவதாகவும், சீனத் தயாரிப்புக்கள் எதையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்றும் கூறினார்.
தனது ரசிகர்களிடமும் டிக்டாக்கை விட்டு நீங்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த பிரபல நடிகர் மிலிந்த் சோமன் விரைவில் தானும் டிக்டாக்கிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தார். அதில், "நான் இனி டிக்டாக்கில் இல்லை. #BoycottChineseProducts" என்று கூறினார்.
3 இடியட்ஸ் படத்தில் அமீர்கான் ஏற்று நடித்த கதாபாத்திரமான ஃபன்க்சுக் வாங்டு (Phunksuk Wangdu) சோனம் வாங்சுக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தப் படம் பின்னர் இயக்குனர் ஷங்கரால் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வெற்றி பெற்றது. இந்தியில் ஃபன்க்சுக், தமிழில் கொசக்சி பசபுகழ் என்ற பெயர்கள் பெற்ற சமூக ஆர்வலரான சோனம், சமீபத்தில் யூடியூபில் சீனத் தயாரிப்புக்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அந்த வீடியோவில், டிக்டாக்கை விட்டு வெளியேறும்படி அவர் வலியுறுத்தினார், சீனா ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுடனான தனது வணிகத்திலிருந்து கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது என்றும், அதே பணத்தினால், எல்லையில் நமது இந்திய வீரர்களைக் கொல்ல சீனா புல்லட் தயாரிக்கிறது என்றும் அவர் கூறினார். பல நெட்டிசன்கள் சோனம் வாங்சூக்குடன் உடன்பட்டனர், மேலும் டிக்டாகை விட்டு நீங்கிய மிலிந்த் சோமானையும் பாராட்டினர்.
இப்படி பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தாலும் ஒரு ரசிகரின் கருத்து ஏற்கத்தக்கதது. அவர் கூறியது, டிக்டாக்கை கணக்கை நீக்குவது மட்டுமே உதவாது, சீன ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற மின் சாதனங்கள் பயன்பாடு அனைத்தையும் நாம் நிறுத்த வேண்டும், ஏனென்றால் அவை சீன அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தைப் பெற்றுத் தருகின்றன.
நம்மில் பெரும்பாலோர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன தயாரிப்புகளை சார்ந்து இருக்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே மேட் இன் சைனா ஐட்டங்களை புறக்கணிப்போம் என்று கூறி #BoycottMadeInChina என்ற ஹாஷ்டேடுடன் பதிவிட்டார்.
இந்த ட்விட்டர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது