பஞ்சாப்: பிரபல விளையாட்டு வீரரும் அரசியல்வாதியும் நடிகருமான பிரவீன் குமார் சோப்டி காலமானார்.
VALIMAI: மதுரை மாவட்டத்தில் சத்தமில்லாமல் செம சம்பவம் செய்த அஜித் நடிக்கும் வலிமை படம்!
பிரவீன் குமார் விளையாட்டில் பல விருதுகளைப் பெற்றவர். குறிப்பாக அர்ஜுனா விருது பெற்றவர். ஆசிய, காமென் வெல்த் பொட்டிகளில் பதங்களை வென்றவர். விளையாட்டில் இவருக்கு இருந்த நற்பெயர் காரணமாக, எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) துணை கமாண்டன்ட் வேலை பெற்றவர்.
‘மகாபாரதம்’ தொடரில் பஞ்ச பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமனாக நடித்து இந்தியா முழுமைக்கும் மிகவும் பிரபலமானவர். மேலும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் நாகேஷ், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, மனோரமா, கமல்ஹாசன் நடிப்பில் 1990-ல் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் பீம் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஒரே படத்தில் நடித்தாலும் ஆயுள் முழுமைக்கும் பேர் சொல்லும் படமாக மைக்கேல் மதன காமராஜன் படம் அமைந்தது. தமிழ் சினிமாவில் இப்போதும் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காமெடி, தொழில்நுட்ப வேலைகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களுள் ஒன்றாக மைக்கேல் மதன காமராஜன் படம் திகழ்கிறது.
அமிதாப் பச்சனின் ஷாஹேன்ஷா உட்பட பல படங்களில் நடித்தார். கரிஷ்மா குத்ரத் கா, யூத், ஜபர்தஸ்த், சிங்காசன், குத்கர்ஸ், லோஹா, மொஹபத் கே துஷ்மன், இலாகா உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் பிரவீன் குமார் சிலகாலம் செயல்பட்டு வந்தார். பின்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு 9:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 74
பிரவீன் குமார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
JaiBhim: 2022-ல் Oscar விருது வாங்குமா ஜெய்பீம்? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்