புதுமுக இயக்குநர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில், விஷால் தயாரித்து நடித்துள்ள படம் 'சக்ரா'.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 19 ரிலீசாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு படத்தின் சிறப்பு காட்சி வரை இணையதளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஷால் நடித்த இந்த சக்ரா படத்தை வெளிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் தான் இந்த உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து இயக்குநர் ஆனந்தன் படமாக்கியுள்ளதாக அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தொடுத்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஆனந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
சக்ரா படம் கடந்த ஆண்டு மே மாதமே ரிலீஸ் செய்வதற்காக திட்டமிடப்பட்டு தேதி குறிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 19 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: “வலிமை பாடலை கேட்டேன்!.. ‘தல’க்காக வெயிட் பண்றது வொர்த்”! - இசையமைப்பாளர் ட்வீட்!