பாடகர் எஸ்.பி.பியின் மறைவு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பாடகர் எஸ்.பி.பியின் மறைவு குறித்து, எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை கூறியதாவது, ''திரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று காலை, அவரது உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. மேலும் அவருக்கு இறுதய சுவாச தடுப்பும் (Cardio Respiratory Arrest) ஏற்பட்டது. சரியாக செப்டம்பர் 25-ஆம் தேதி பிற்பகல் 1.04-க்கு அவர் உயிர் பிரிந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.