“கடைசி VOICE NOTE அதான்!”.. 'மெட்டி ஒலி' உமா இறப்பு குறித்து கண்கலங்கிய நடிகை லதா! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஷ்வரி, சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 40.

இவருடைய இறப்பு குறித்து பல்வேறு சக நண்பர்களும் பல தகவல்களை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் சீரியல் நடிகை லதா, உமா மகேஷ்வரி உடனான தன்னுடைய நட்பு மற்றும் அனுபவங்களை உருக்கமாக பேசியிருக்கிறார்.

அதில், “சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் பார்க்கும் பொழுது நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஒரு உமாவை நாங்கள் பார்த்துவிட்டு, நேற்று உமாவை பிரேதமாக பார்க்கும் பொழுது உடலில் ஒன்றுமே இல்லை. அதை பார்த்ததும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. வெறும் எலும்பு தான் இருக்கிறது. அந்த அளவுக்கு ஏன் உடல் மீது அக்கறை செலுத்தவில்லை? என கோபம் கூட வந்தது.

அவ்வபோது என்னுடைய எல்லா விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்து சொல்லி வருவார். ஆனால் அவருக்கு அப்படி எந்த வாழ்த்துக்களையும் நான் கூறவில்லை என்று நான் கூட குற்ற உணர்வுக்கு ஆளானேன். அண்மையில் கூட என்னுடைய அப்பா அம்மாவின் 50வது திருமண நாள் பற்றி ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன்.

எப்போது ஸ்டேட்டஸ் பார்த்தாலும் உமா வாழ்த்து சொல்வார். அன்று அவருடைய வாழ்த்துக்கள் வரவில்லையே என்று நினைத்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு துயர நிகழ்வு நடந்து விட்டது. கடந்த முறை என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லியிருந்தார். மிகவும் தாமதமாக வந்த மெசேஜ் அது. நான் அவருக்கு அப்போது மெசேஜ் பண்ணினேன். “மறந்துட்டீங்களோ என்று நினைத்தேன்!” என்று கூறினேன்.

அப்போது அவர் ஒரு வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தார். “இல்ல மாமனார் வீட்டில் இருக்கேன். கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சனை. ஹேப்பி பர்த்டே!” என்று கூறியிருந்தார். அதுதான் அவர் கடைசியாக எனக்கு அனுப்பிய வாய்ஸ் நோட். கடைசி வாழ்த்தும் அதுதான்.” என்று நடிகை லதா உருக்கமாக பேசியிருக்கிறார். தொடர்ந்து உமா மகேஷ்வரி பற்றி திரைப்பட நடிகை நடிகை லதா பேசக்கூடிய முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

“கடைசி VOICE NOTE அதான்!”.. 'மெட்டி ஒலி' உமா இறப்பு குறித்து கண்கலங்கிய நடிகை லதா! VIDEO வீடியோ

Metti oli viji uma maheswari last voice note latha exclusive

People looking for online information on Latha, Metti oli uma maheswari, Metti Oli viji, Metti oli viji uma, RIPUmaMaheswari, UmaMaheswari will find this news story useful.