BIGG BOSS 6 : "அசல் பொண்ணுங்களோட மட்டும் CLOSE-ஆ இருந்தாரா?" - மனம் திறந்த போட்டியாளர் சாந்தி.! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இன்றைய தமிழ் சீரியல்களின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் சங்கமித்த சீரியலாக புகழ்பெற்ற மெட்டி ஒலி சீரியலின் புகழில் அதன் அறிமுக பாடலான அம்மி அம்மி அம்மி மிதிச்சு பாடலும், அதில் நடனம் ஆடிய பிரபல நடன கலைஞர் சாந்திக்கு ஒரு சிறிய பங்கு இருக்கிறது எனலாம். தவிர முன்னணி திரைப்படங்களில் பின்னணி நடனக்கலைஞராக பணிபுரிந்துள்ள நடன கலைஞர் சாந்தி, அண்மை காலங்களில் சிரியல்களிலும் நடித்துவந்தார். இந்நிலையில் பிக்பாஸின் 6வது சீசனில் இருந்து வெளியே வந்த பின்னர் பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

அதில், அசல் பற்றி பேசும்போது “இதில் அசல் வெளியேறும் பொழுது ஏன் வெளியேறுகிறார்கள் என்ற காரணத்தை முன் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கமல் கூறியிருந்தார் அதைத் தவிர வேறு எந்த போட்டியாளர்களும் கமல்ஹாசன் சொல்லவில்லை வெளி உலகை பொறுத்தவரை அசல் கோளாறு நிவாரணி மற்றும் பெண்களுடன் நெருக்கமாக பழகிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன இதுபற்றிய கேள்வி சாந்தியிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சாந்தி, “நான் இருந்த இரண்டு வார காலத்தில் அப்படி எந்த விஷயத்தையும் பார்க்கவில்லை. இரண்டாவது வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகுதான் இவர்கள் (அசல், நிவாஷினி) இருவரும் தனியாக சென்று அமர்வது , உணவு உண்பது உள்ளிட்ட விஷயங்களை பார்க்க முடிந்தது. அது மற்றவர்களுக்கு ஃபோகஸ் ஆனது. ஆனால் அவர் பெண்களுடன் மட்டுமே நெருக்கமாக பழகியதாக எனக்கு படவில்லை. அவர் உண்மையில் மிகத் திறமை மிக்கவர், நான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்தே அவருடைய திறமை குறித்து அவரிடம் கூறி கொண்டிருந்தேன்.

வெளிப்படையாக பேசுவது, பிடித்த - பிடிக்காத விஷயங்கள் பற்றி இயல்பாக சொல்வது என அனைத்திலும் நேரடியாகவே இருந்தார். ஆனால் அவர் வயதுக்கான சவுகரியமான இடத்தில்தானே அவர் பேச முடியும்? என்னுடனோ, முத்து அண்ணாவுடனோ, ராபர்ட் மாஸ்டருடனே அவர் பேச முடியாது.. எனவே அவருடைய வயதுக்காரர்களுடன் அவர் நெருக்கமாக இருந்தார். அது வெளியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது குறித்து நானும் அதிர்ச்சி அடைந்தேன்.

அப்படி அசல் தவறாக பேசியதாகவோ, தொடுவதாகவோ இருப்பின், அவை தவறாக தெரிந்தால் அந்த பெண்களே புகார் அளித்திருப்பார்கள். நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவருமே அவருடன் நட்புடன் இருப்பதை காண முடிந்தது.  ஆனால் அவர்கள் கம்ஃபோர்டபிளாகவே உணர்ந்தனர். சிலருடைய பார்வையில் அது தவறாக தெரிந்திருந்தால், அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். நான் இருந்த இரண்டு வாரத்தில் நான் பார்த்ததில் அவ்வாறு எனக்கு தெரியவில்லை” என்று சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

BIGG BOSS 6 : "அசல் பொண்ணுங்களோட மட்டும் CLOSE-ஆ இருந்தாரா?" - மனம் திறந்த போட்டியாளர் சாந்தி.! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Metti Oli Shanthi talks about Asal Kolar Exclusive Interview

People looking for online information on Asal kolaar, Asal Kolar, Metti Oli Shanthi will find this news story useful.