VIDEO: விஷால்- ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் மனதை மயக்கும் டம் டம் பாடல்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இருமுகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் 'எனிமி'  படத்தில் விஷால் மற்றும் ஆர்யா  இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார். பாடல் இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குநராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்து வருகிறார்கள். இசையமைப்பாளர் சாம் CS பின்னணி இசையமைத்துள்ளார்.

சென்னை மற்றும் துபாயில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்த தருவாயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து படத்தின் சிங்கிள் பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன் படி படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலாக டும் டும் பாடலை இசையமைப்பாளர் தமனால் வெளியிடப்பட்டுள்ளது.

VIDEO: விஷால்- ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் மனதை மயக்கும் டம் டம் பாடல்!!! வீடியோ

Tags : Thaman, Vishal, Arya

தொடர்புடைய இணைப்புகள்

Mesmerizing enemy second single tum tum released

People looking for online information on Arya, Thaman, Vishal will find this news story useful.