விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணையும் படத்திற்கு மேரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
Also Read | AK61 படத்தின் சென்னை ஷூட்? செம லுக்கில் மஞ்சு வாரியர்! கூட இந்த நடிகை வேற இருக்காங்க!
தமிழைத் தவிர தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே மும்பைகார் என்ற பாலிவுட் படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். அந்த படம் தமிழில் வெளியாகி ஹிட்டான மாநகரம் படத்தின் ரீமேக் ஆகும். அதில் முனீஸ்காந்த் நடித்த பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரின் இரண்டாவது படமாக ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ உருவாகி வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். ஸ்ரீராம் ராகவன் பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். இவர் அந்ததூண், ஏஜெண்ட் வினோத், பத்லாபூர் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவரின் சமீபத்தைய படமான அந்தாதூன் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தாதூன் திரைப்படம் தற்போது தமிழில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.
ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தை தயாரிக்கிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்வு தற்போது துவங்கி உள்ளது. இந்த ஒத்திகையில் நடிகை கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி, இயக்குனர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் கத்ரினா கைஃப் வெளியிட்டுள்ளார்.
Also Read | மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் "நண்பகல் நேரத்து மயக்கம்".. வித்தியாசமான அசத்தல் POSTER!