"அதிர்ச்சி".. பட்டாஸ் பட ஹீரோயின்.. நடக்கவிருந்த 'திருமணத்தை முறித்துக் கொள்வதாக' அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

=பிரபல தெலுங்கு படமான 'கிருஷ்ணா காடி வீர பிரேமா காதா' மூலம் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமானார் மெஹ்ரீன் பிர்சாடா.

பின்னர் அவர் 'பில்லாரி' மற்றும் 'நோட்டா' போன்ற படங்களில் நடித்தார். தனுஷின் 'பட்டாஸ்', சுசீந்திரன் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் படங்களில் நடித்த பிறகு மெஹ்ரீன் பிர்சாடா கோலிவுட்டில் புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் தம் காதலனுடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் தான், பவ்யா பிஷ்னாயுடன் நிச்சயதார்த்தம் செய்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, இதுகுறித்த தமது தற்போதைய அறிவிப்பில், “இது சுமூகமாகவும், சிறந்த நலனுக்காகவும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொஞ்ச நாளைக்கு முன்பு, இவர்களின் ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பவ்யா பிஷ்னாயும் நானும் திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம், என் இதயத்தில் இருந்து, மரியாதையுடன் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். இப்போது முதல் எனக்கு பவ்யா பிஷ்னோய், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ” என தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த விவகாரம் தொடர்பான முடிவை தெரிவிக்கும் ஒரே அறிக்கை இதுதான்!” என்று  கூறிய மெஹ்ரீன் பிர்சாடா, “இது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்பதால், என் தனியுரிமையை மதிப்பீர்கள் என நான் நம்புகிறேன்”என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ALSO READ: பெரும் பரபரப்பு! ஷாக் ஆன திரையுலகம்! விவாகரத்தை அறிவித்த அமீர்கான் - கிரன் ராவ்!

Mehreen Pirzada breaks off engagement with Bhavya Bishnoi

People looking for online information on Mehreen Pirzada will find this news story useful.