கடந்த ஜூன் 7-ம் தேதி பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியால் அவரது மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.
இந்த ஜோடி தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்க ஆவலுடன் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் இந்த திடீர் சோகம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் தள்ளிவிட்டது. இதற்கிடையில், ஞாயிறன்று நடிகை மேகனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பெரிய கட்-அவுட் ஒன்று மேக்னாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருக்கத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags : Meghna Raj, Chiranjeevi Sarja, Baby Shower