தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிக்பாஸ் வீட்டுக்கு சென்று அதன் மூலம் பிரபலம் ஆனவர் மீரா மிதுன்.
"சூப்பர் ஸ்டார் போன் பண்ணி பாராட்டினார்"... முதல்வர் ஸ்டாலினின் வைரல் tweet!
சினிமாவும் மாடலிங்கும்…
8 தோட்டக்கள், போதை ஏறி புத்தி மாறி மற்றும் 8 தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சிறுவேடங்களில் நடித்தவர் மீரா மிதுன். இவர் மாடல் துறையிலும் ஈடுபட்டு வந்தார். பிக்பாஸ் இல்லத்துக்கு போட்டியாளராக சென்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இவர் முன்னணி நடிகர்கள் பற்றி தவறாகவும் பேசிவந்தார். இதனால் சமூகவலைதளங்களில் அவரை ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அறிவுரை சொன்ன மூத்த இயக்குனர் ஒருவரையும் மீரா மிதுன் மதிக்காமல் பேசிவந்தார்.
அவதூறு வீடியோ…
அதுபோலவே தமிழ் திரைத் துறையில் இயக்குனர்கள் மற்றும் அவர்களின் சாதியை குறித்து அவதூறாக பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவரை கைது செய்யவேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
கேரளாவில் கைது…
மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று புகாரும் அளிக்கப்பட்டது. அதன்படி கலகத்தை தூண்டும் வகையிலான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக மீராவை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அப்போதும் அவர் போலீசாரோடு வாக்குவாதம் செய்த வீடியோக்களும் புகைப்படங்களும் அந்த நேரத்தில் வைரலாகின.
ஜாமீனும் வழக்கு விசாரணையும்…
சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மீரா மிதுன் தொடர்ந்து ஜாமினுக்கு முயற்சி செய்து வந்திருந்த நிலையில் அவருக்கு ஜாமின் கிடைத்து, புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை என்பதால் இப்போது அவரை கைது செய்து ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆண்ட்ரியாவுக்கு கெடச்ச கோல்டன் விசா ... வைரலாகும் புகைப்படம் - வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!