சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட 'மீனா 40' நிகழ்ச்சியின் சூப்பர் டிரெய்லர்.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.

Advertising
>
Advertising

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும் ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என தமிழ் மொழியிலும் இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் மீனா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் பகிர்ந்து வரும் சூழலில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா, திரை உலகில் கால் பதித்து தற்போது 40 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது.

சமீபத்தில், 40 ஆண்டுகள் சினிமா உலகில் நடிகை மீனா நிறைவு செய்ததையொட்டி Behindwoods சார்பில் Meena 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி விரைவில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட 'மீனா 40' நிகழ்ச்சியின் சூப்பர் டிரெய்லர்.. வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Meena40 Super Star Rajinikanth Behindwoods Event Trailer

People looking for online information on Meena, Meena 40, Rajinikanth will find this news story useful.