ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த மலையாள த்ரில்லர் படம் திரிஷ்யம்.
இப்படத்தின் இரண்டாம் பாகமான திரிஷ்யம்-2 படம் இதே கூட்டணியில் தற்போது உருவாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் நடித்த நடிகை மீனா பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் மீனா கூறும்போது, “திரிஷ்யம் 2-வது பாகம் எடுக்கப்போவதாக சொன்னவுடனே எனக்கு ஆர்வ மிகுதி அதிகமானது. இந்த கதையை ஜீத்து சார் என்னிடம் சொல்லும்போது, க்ளைமேக்ஸ் மட்டும் சொல்லாமல், படப்பிடிப்பில் மீதி கதையை சொல்லட்டுமா? என கேட்டார். எனக்கு கடுப்பாகிவிட்டது. கதையைக் கேட்டு அடம் பிடித்தேன்.
பொதுவாகவே பலரும் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துவிடுவர். இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் அளவுக்கு இலலையென்று கூறிவிடுவார்கள். இந்த இரண்டாம் பாகத்தின் இடத்திலும் ஓர் இடத்தில் போலீஸ் விசாரிக்கும்போது நாங்கள் ஆக்ஸ்டு 3-ஆம் தேதி என்று மோகன்லால் ஆரம்பிப்பார். போச்சுடா.. ஆடியன்ஸ் கொல்லப்போறாங்க என நினைத்தேன்.
பாபநாசம் படத்தை பொறுத்தவரை சுயம்புலிங்கத்துக்கும் ஜார்ஜ் குட்டிக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. அந்த கதாபாத்திரத்துக்கு நேட்டிவிட்டியுடன் ஒன்றி நடித்த கமல் முழுக்க முழுக்க வேறு வண்ணம் கொடுத்திருப்பார்.” என மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை பேசியுள்ளார்.