“அப்படியே சின்ன வயசு மீனா!”.. நைனிகா & மீனாவின் LATEST ஃபோட்டோஷூட்க்கு 90S ஹீரோயின் ‘தெறி’ கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா தமிழ் சினிமாவில் 80-களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கி 90-கள் முதல் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

meena daughter looks like younger meena says rambha

இன்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மீனா. குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக 80-களில் அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில்  நடித்து பிரபலமான மீனா, பிறகு ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

meena daughter looks like younger meena says rambha

‘ஒரு புதிய கதை’, ‘என் ராசாவின் மனசிலே’ உள்ளிட்ட திரைப்படங்களில் மீனா நாயகியாக நடித்து தற்போது வரை பெரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே மீனாவின் குழந்தை பேபி நைனிகா தளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.

meena daughter looks like younger meena says rambha

பிரபல இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பேபி நைனிகா அனைவரையும் கவரும்படியான தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். நடிகை மீனா தற்போது ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் மோகன்லால் நடிப்பில் உருவான திரிஷ்யம் பட வரிசைகளிலும் மீனா, மோகன்லாலின் மனைவியாக நடித்திருப்பார். மலையாளம் மற்றும் தென்னிந்தியாவில் ஒரு ஹிட் தொடர்வரிசை திரைப்படமாக திரிஷ்யம் மற்றும் திரிஷ்யம் இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்கள், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிரட்டலான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களாக அமைந்தன.

இந்த நிலையில்தான் மீனா மற்றும் மீனாவின் மகள் நைனிகா இருவரும் அண்மையில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோ ஷூட் ஒன்று படு வைரலாகி வருகிறது. இணையத்தில் ரசிகர்களிடையே ட்ரெண்டாக இருந்து வரும் இந்த ஃபோட்டோஷூட்டில் மீனாவும் அவருடைய மகளும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து போஸ் கொடுத்து இருக்கின்றனர்.

இந்த ஃபோட்டோக்களை பார்த்தால் பேபி நைனிகா நெடுநெடுவென வளர்ந்து விட்டார் என்பது தெரியவருகிறது என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்த புகைப்படத்துக்கு 90-களின் புகழ் பெற்ற நடிகை ரம்பா, முக்கியமான கமெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ஆம் 90-களில் மீனாவை போலவே இன்னொரு பிரபலமான மற்றும் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை ரம்பா.

முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் ரம்பா, மீனாவின் மகள் நெடுநெடுவென வளர்ந்து விட்டதாகவும் அவரை பார்க்கும் பொழுது சிறிய வயது மீனாவை பார்ப்பது போலவே இருப்பதாகவும் மீனாவின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த ஃபோட்டோக்களுக்கு கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

நடிகை ரம்பாவின் இந்த கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read: நாக்கை துருத்தி.. "தெறிக்க விடுறாங்களே!".. சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் fans-அ கைலயே புடிக்க முடியல!.. Internet-ஐ கலக்கும் #Viral போட்டோ!!!

Tags : Meena, Vijay

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Meena daughter looks like younger meena says rambha

People looking for online information on Meena, Vijay will find this news story useful.