“நானும் அண்ணன் இளையராஜாவும் வேற வேற கட்சிங்க.. நிஜமாவே..” - பிக்பாஸ் ஃபினாலேவில் கமல் கலகல.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Me and ilaiyaraaja diffent parties Kamal Haasan Bigg Boss
Advertising
>
Advertising

Also Read | நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு, தமிழ்நாட்டில் bigg boss ஜனனிக்கு குவியும் வாய்ப்புகள்..?!

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

Me and ilaiyaraaja diffent parties Kamal Haasan Bigg Boss

இந்நிலையில் நடந்து முடிந்த கிராண்ட் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.  வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக ஃபினாலேவில் பலரும் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டனர். அப்போது கேள்வி கேட்ட ராபர்ட் மாஸ்டர், “எனக்கும் என் நண்பருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. நீங்களும் ரஜினி சாரும் இப்ப வரைக்கும் எப்படி இத்தனை வருடம் பயணிக்குறீங்க?” என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கமல், “நாடே அப்படித்தான் பன்முகத்தன்மையோட இருக்கணும்.  நண்பர்கள்னா அதெல்லாம் இருக்கணும். நான் சாமி கும்பிட மாட்டேன், ரஜினி சாமி கும்பிடுவார். ஏன் நானும் என் அண்ணன் இசையமைப்பாளர் இளையராஜாவும் மிகவும் நெருக்கம். ஆனால் நிஜமாகவே நாங்கள் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் அதற்கும் அன்புக்கும் நட்புக்கும் சம்மந்தமே கிடையாது. தொடர்ந்து வாதம் பண்ணுவோம், சண்டை போடுவோம். ஆனால் ஒருவருக்கொருவர் வேண்டும் என்று முடிவெடுத்து, அந்த பேச்சை தொடர வேண்டாம் என விட்டுவிடுவோம்.” என சிரித்தபடி பதில் அளித்தார்.

Also Read | டைட்டில் வென்ற அசிமின் அடுத்த ப்ளான் இதுதானா.? ஃபினாலேவில் அவரே சொன்ன விஷயம்.. bigg boss 6

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Me and ilaiyaraaja diffent parties Kamal Haasan Bigg Boss

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg boss grand finale, Bigg Boss Tamil, Kamal Haasan will find this news story useful.