நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது அதிகாலையில் கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவரை மருத்துவமனை அழைத்து சென்ற சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
Also Read | "வதந்தியை பரப்பாதீங்க, நிஜத்துல இதான் நடந்துச்சு".. மயில்சாமி மரணம் பற்றிய கருத்து.. மகன் சொன்ன உண்மை!!
இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது மறைவு பலரை வாட்டியும் வருகிறது.
சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இல்லை என்ற சூழலிலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் இல்லாத மயில்சாமியின் மறைவு பற்றி பலரும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், மயில்சாமியின் மகனான யுவன், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தந்தையின் மரணம் குறித்தும், அதற்கு முன்பு அவருடனான பிணைப்பு குறித்தும் ஏராளாமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து தந்தை மரணம் அடைந்தது உறுதியான சூழலில் அதன் பின்னர் நடந்தது பற்றி பேசி அவரது மகன் யுவன், "அப்பா இறந்தது உறுதியானதும் நான் போன் எடுத்து முதல்ல நான் அருண் விஜய் அண்ணாவுக்கு தான் கால் பண்ணேன். என்னோட சொந்த அண்ணன் மாதிரி அவரு. எனக்கு இப்போ வரைக்கும் என்ன நம்பிக்கைன்னா எங்க அப்பா எல்லாம் கிளம்பிட்டாரு அப்படின்னு நான் நம்பவே இல்லை. ஏன்னா ஒரு 15 நிமிஷத்துல எல்லாம் நடந்தது.
இப்ப வர நான் பிளாஸ்ட அவுட் ஆகல. ஏன்னா அதைவிட எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. வருத்தப்படுவதை விட அவர் பண்ண வேலையை நிறைய பாக்கணும் அப்படின்னு இருக்கு. எங்க அப்பா இறந்து நான் அழுதேன் அப்படின்னா, அருண் விஜய் அண்ணாவுக்கு போன் பண்ணப்போ ஒரு பத்து செகண்ட் தான் அழுதேன். அதுக்கப்புறம் வர்றவங்க எல்லாம் நான் சமாதானப்படுத்தி உட்கார வைக்கணும். முக்கியமான விஷயம் அம்மாக்கு வருத்தத்தை கொடுக்காமல் பாத்துக்கணும். அதுக்கு ஒருத்தவங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அவர் பண்ணதெல்லாம் பார்த்து நானும் சந்தோஷப்பட்டு தான் இருக்கேன்" என கூறினார்.
Also Read | மயில்சாமி இறந்த அன்று என்ன நடந்தது ..? உடைக்கும் அவரது மகன் யுவன்..