'வாரிசு' வெற்றியடைய தோப்புக்கரணம்.. கோயிலில் வழிபட்ட விஜய் ரசிகர்கள்.. வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் வாரிசு படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் மயூரநாதர் கோயிலில் 108 தோப்புக்கரணம் போட்டு பிராத்தனை செய்தனர். மேலும் கோயிலில் மக்களுக்கு உணவு வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Tags : Varisu, VMI, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Mayiladuthurai Vijay fans prayers for Varisu Success

People looking for online information on Varisu, Vijay, VMI will find this news story useful.