சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. இதில், கமலுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதே போல, நடிகர் சூர்யாவும் கவுரவ தோற்றம் ஒன்றில் நடித்துள்ளது பற்றி, ஏற்கனவே அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது.
விக்ரம் படத்தின் முன்பதிவு
விக்ரம் திரைப்படம், நாளை (03.06.2022) வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை வேற லெவலில் எகிற வைத்துள்ளது. இதனால், திரைப்படம் வெளியாகும் நேரத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்து வருகின்றனர். பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி உள்ள விக்ரம் படத்தின் முன்பதிவும், கடந்த சில தினங்களுக்கு முன், உலகளவில் ஆரம்பமாகி இருந்தது.
மாயாஜால் Multiplex
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், விக்ரம் படத்திற்கான புக்கிங் படு வேகமாக நடைபெற்றது. அதே போல, பல திரையரங்குகளில், அடுத்தடுத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய Multiplex திரையரங்கான மாயாஜாலில், விக்ரம் ரிலீஸ் ஆகும் முதல் வார இறுதி வரை மொத்தம் 230 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு மொத்தம் 230 காட்சிகள் விக்ரம் படத்திற்காக, மாயாஜாலில் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி பல திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட உள்ளதால், விக்ரம் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.