பிரபல OTT-களில் இந்த வாரம் ரிலீசாகும் முக்கியமான படங்கள்.. எப்போ? எதுல? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கேன்ஸ் பட விழா.. பூஜா ஹெக்டேவுடன் செல்ஃபி எடுத்த "LEGEND" A.R. ரஹ்மான்.. தீயாய் பரவும் புகைப்படம்!

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த மே மூன்றாவது வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யா

சிரஞ்சீவி தன்னுடைய மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தில் ராம் சரண், பூஜா ஹெக்டே ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீஸானது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைமில் இன்று முதல் (மே 20 ஆம் தேதி) தமிழ், தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RRR

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.

இந்த படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் இந்த திரைப்படம் இன்று மே 20 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் & Book My Show தளங்களில் ஸ்ட்ரீமாக உள்ளது.  தென்னிந்திய மொழிகளான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீமாக உள்ளது.

ஜெர்ஸி

ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெர்ஸி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கவுதம் தின்னானுரி இயக்கத்தில் கிரிக்கெட் வீரராக நானி நடித்த தெலுங்கு திரைப்படம் ஜெர்ஸியின் ரீமேக் ஆகும். இந்த தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.

இப்படத்தில் பிரம்மாஜி, சுப்பாராஜு, சத்யராஜ், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  அனிருத் இசையில் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இந்த படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது இந்தியில் இந்த படம் ஷாகித் கபூர் & மிருணாள் தாகூர் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கௌதமே இயக்கியுள்ளார்.

12th Man

மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம், த்ரிஷ்யம்-2 படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப். மலையாளத்தில் த்ரில்லர் படங்களை இயக்குவதின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர். இவர் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் மலையாள சினிமாவில் மைல்கல் திரைப்படமானது. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் மோகன்லாலை வைத்து ஜீத்து ஜோசப் '12th Man' படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று (20.05.2022) வெளியாகி உள்ளது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்க, விநாயக் எடிட்டிங் செய்ய, அணில் ஜான்சன் பின்னணி இசையில் இந்த படம் உருவானது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

May third week OTT Release Movies prime Netflix Zee5 Disney plus Hotstar

People looking for online information on May third week OTT Release Movies, OTT Release Movie will find this news story useful.