தமிழில் அறிமுகமாகும் பிரபல இளம் மலையாள நடிகர்.. தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் பிரபல இளம் மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த்.. படம் குறித்து என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க 😍

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில், "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவதை விட சிறந்த ஒன்றை எதிர்பார்க்க முடியாது". என மேத்யூ தாமஸ் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

மேத்யூ தாமஸ் மலையாள சினிமாவில் கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆபரேஷன் ஜாவா, ஜோ அன்ட் ஜோ, அஞ்சம் பார்த்திரா, தண்ணீர் மதான் தினங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மாளவிகா மோகனனுடன் கிறிஸ்டி படத்தில் நடித்துள்ளார்.

Also Read | "21 வருசத்துக்கு முன்னாடி".. தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி!

தொடர்புடைய இணைப்புகள்

Mathew Thomas about His Tamil Debut with Thalapathy 67

People looking for online information on Mathew Thomas, Thalapathy 67 will find this news story useful.