வெளியானது 2021-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 5 திரைப்படங்களின் வரிசை பட்டியல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021-ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளுக்கான திரைப்படங்களாக டாப் 5 தென்னிந்திய திரைப்படங்களை ட்விட்டர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

Advertising
>
Advertising

அதன்படி விஜய் நடித்த #Master திரைப்படத்தையும், அஜீத் நடித்து வெளிவரவுள்ள #Valimai திரைப்படத்தையும், விஜய் நடிப்பில் உருவாகி வரும் #Beast திரைப்படத்தையும், சூர்யா நடிப்பில் வெளியான #JaiBhim திரைப்படத்தையும், பவன் கல்யாண் நடிப்பில் வெளியான  #VakeelSaab படத்தையும் ட்விட்டர் இந்தியா குறிப்பிட்டுள்ளது. 

இந்த தரவரிசை ஜனவரி 1-ஆம் தேதி முதல், நவம்பர் 15-ஆம் தேதி வரை, எத்தனை பயனாளர்கள் இந்த ஹேஷ்டேகுகளை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை பொறுத்து வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் விஜய் சேதுபதி நடித்திருந்தனர். அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். 

இந்த வரிசையில் அஜீத் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படம் இடம் பெறுகிறது. இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் முக்கிய பாடலான அம்மா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 

இந்த பட்டியலில் அடுத்து, விஜய் நடிப்பிலான Beast படம் இடம் பெற்றிருந்தது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இரவு நேர படப்பிடிப்பு நேற்றிரவு கூட சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. முன்னதாக இப்படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு அன்று இயக்குநர் பகிர்ந்த போட்டோ ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். 

இதேபோல், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகி விமர்சன உலகில் பேசுபொருளான படம் ஜெய்பீம். மனித உரிமை மீறலையும், காவல்துறையினரின் அதிகாரப் போக்கையும் இப்படம் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் இடம் பெற்ற இன்னொரு படம் தான், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளியான வக்கீல் சாப். பாலியல் சீண்டலால் பாதிக்கபட்ட பெண்களை குற்றவாளிகளாக்கும் ஆண்களிடம் இருந்து அப்பெண்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் வக்கீலின் கதாபாத்திரம் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஆகும்.

இந்தியில் அமிதாப் பச்சன், தாப்ஸி நடித்து உருவான பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படம், தமிழில் அஜீத் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரிலும் ரீமேக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Master Valimai Beast JaiBhim VakeelSaab 2021 most tweeted movies

People looking for online information on Ajith Kumar, Beast, Jai Bhim, Master, Suriya, VakkeelSaab, Valimai, Vijay will find this news story useful.