அடித்து நொறுக்கிய மாஸ்டர்... வெற்றிகரமான 50 வது நாள்... லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படம் வெளிவந்ததால் மூடியிருந்த திரையரங்குகளின் வாழ்வாதாரம் உயிர்ப்பிக்கப் பட்டது என்றே சொல்லலாம். அதை தொடர்ந்து சில படங்களும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். மாஸ்டர் ஷூட்டிங்கின்போது நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கலந்து கொண்ட ஜாலியான இறுதிகட்ட காட்சிகளை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.  மேலும் கூறிய அவர் "இது எத்தனை முறை சொன்னாலும் மிகையாகாது. விஜய் அண்ணா மற்றும் விஜய் சேதுபதி அண்ணாவிற்கு நன்றி" என்று கூறியுள்ளார். இதுவரை ரசிகர்கள் பார்த்திராத இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அடித்து நொறுக்கிய மாஸ்டர்... வெற்றிகரமான 50 வது நாள்... லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வீடியோ..! வீடியோ

Tags : Master, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Master unseen video by lokesh kanagaraj லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வீடியோ

People looking for online information on Master, Vijay will find this news story useful.