' மாஸ்டர்' தயாரிப்பாளர் - '' அந்த சீன்ல விஜய் சூப்பரா பண்ணாரு... அதுக்கு அவர தூக்கி சுத்துனாரு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, ''விஜய் கிட்ட ஒரு படம் பண்ணலாமானு கேட்டேன்.. அத மனசுல வச்சுக்கிட்டு என்ன கூப்டு அண்ணா ஒரு படம் பண்ணலாமானு கேட்டாரு. அத பார்த்து என் நண்பர், ''விஜய் சார் ரொம்ப பணிவா தான் பேசுறாருனு சொன்னார்.

ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்ல ஸ்டண்ட் சில்வா இருந்தாரு. ஒரு ஸ்டண்ட் பண்ண வேண்டியிருந்தது. அதோட டெமோ பார்த்துட்டு இத நீங்க பண்ணனுமானு விஜய் கிட்ட கேட்டேன். அவர் சின்னதா சிரிச்சாரு. அத சூப்பரா பண்ணிட்டு வந்துட்டாரு. ஸ்டண்ட் சில்வா விஜய்ய தூக்கி சுத்துனாரு.

இதுபத்தி அவர்கிட்ட கேட்டப்போ சின்னதா ஸ்மைல் பண்ணாரு. எனக்கு விஜய் சேதுபதி கிட்ட ரொம்ப புடிச்சது அவரோட டயலாக் டெலிவரி தான். மாஸ்டர் விஜய்யும் விஜய் சேதுபதி சேர்ந்து நடிச்ச இந்த மாஸ்டர் படம் ஒரு மாஸ்டர் பீஸ்ஸா இருக்கும்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி குறித்து மாஸ்டர் தயாரிப்பாளர் சுவாரஸியத் தகவல் | Master Producer Xavier Br

People looking for online information on Anirudh Ravichander, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.