'மாஸ்டர்' பட புகழ் சிபி நடிக்கும் புதிய படம்.. பூஜையுடன் வெளியான செம தகவல்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வஞ்சகர் உலகம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சிபி. இவர் பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

Advertising
>
Advertising

இந்நிலையில், சிபி அடுத்து நாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து, அசத்தலான தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் மிஷ்கினுடன் மூன்று படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள "Rocketry:The Nambi Effect" படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளவர் பாலாஜி மாதவன்.

சிபி நடிக்கும் புதிய படம்

இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், சிபி நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்தின் நாயகிகளாக பவ்யோ த்ரிகா மற்றும் யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன், ஜெய் ஆதித்யா, வின்சென்ட் நகுல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்தின் பூஜை

'Pavaki Entertainment' நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. இதனிடையே, சிபி - பாலாஜி மாதவன் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், இயக்குனர்கள் மிஷ்கின், பி. வாசு, ஆர் கே செல்வமணி, நடிகர் சக்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஒரு விபத்தினால் 13 வயது சிறுவனும், ஒரு இளம் காதல் ஜோடியும் நிர்கதியான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக, அச்சூழலே அவர்களை இணைக்கிறது. குற்றவுணர்ச்சியாலும், பழிவாங்கும் உணர்ச்சியாலும் அலைக்கழிக்கபட்டவர்கள், இறுதியில் அறத்தைக் கண்டடைவது தான் இந்த படத்தின் கதைச் சுருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை நடந்த புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Master movie fame Actor ciby new movie started with pooja

People looking for online information on Balaji Madhavan, Ciby Bhuvana Chandran, Pavaki Entertainment will find this news story useful.