லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங், பின்னணி இசை சேர்த்தல் போன்ற போஸ்ட் புரொட்கசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 'மாஸ்டர்' பட அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் மகேந்திரன் 'மாஸ்டர்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அவர் ஏற்கனவே தளபதி விஜய்யுடன் 'மின்சாரக் கண்ணா' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சன் டிவியில் நேற்று (26/05/2020) ஒளிபரப்பானது. அந்த படத்தில் தளபதி விஜய்யின் தம்பியாக மாஸ்டர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் குறித்து பகிர்ந்து ரசிகர்கள் தங்கள் நினைவுகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் மகேந்திரன் கியூட்டாக நடனமாடியிருப்பார். இந்த வீடியோவை பகிர்ந்து மகேந்திரனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் மகேந்திரன், ''அப்போவே நம்ம தளபதி கூட ஆடிட்டேன்'' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.