நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாஸ்டர் படம் வெளிவந்ததால் மூடியிருந்த திரையரங்குகளின் வாழ்வாதாரம் உயிர்ப்பிக்கப் பட்டது என்றே சொல்லலாம். அதை தொடர்ந்து சில படங்களும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டது. இந்த திரைப்படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரும் கூட. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் "மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. பன்முக திறமை வாய்ந்த இயக்குனர் விஷ்ணு வரதனுடன் 'இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் முரளியின் மகனும். அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.