சன் டி.வியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (29-08-2021) ஒளிபரப்பான 8-வது எபிசோடில் சசி அம்மாள் எலிமினேட் ஆகியுள்ளார்.
சன் டி.வியி. ஒளிபரப்பாகும் இந்த சமையல் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது. இதில் 7 எபிசோடுகள் நிறைவடைந்த நிலையில், 8வது எபிசோடில் சசி அம்மாள் நிறைவு பெற்றார். அவர் பற்றிய பேசிய சக போட்டியாளர்கள் அவர் இந்த வயதிலும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
62 வயதான சசி அம்மாள் பற்றி நடுவர் பேசும்போது, ஆடிஷனுக்காக கோவை, மதுரை ஆகிய இடங்களுக்கு அவர் வந்ததாக குறிப்பிட்டார். அப்போது சசி அம்மாள், “டாக்ஸியில் போக அதிக பணம் கேட்டதால், சமைத்து உணவை எடுத்துக்கொண்டு ஆடிஷன் நடக்கும் இடத்துக்கு வந்தேன்” என குறிப்பிட்டு நெகிழ நடுவர்களும் அவரை பாராட்டி நெகிழ்ந்துவிட்டனர்.
மேலும் தனக்கு மறைந்த தன் கணவர் ஊக்கம் அளித்ததாகவும், அவர் நிகழ்ச்சியை செட்டுக்கு வெளியில் இருந்து எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் சசி அம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி குறிப்பிடும்போது, “சசி அம்மாள் உங்க வயதில் இருக்கும் பலர் உங்களை பார்த்து அடுத்தடுத்து கலந்துகொள்வார்கள். நீங்கள் கலந்துகொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்!” என குறிப்பிட்டார்.
இதில் சசி அம்மாள் செய்த ‘கோக்கம் ஃபிஷ் கறி’யில் மீன் இனிப்பு சுவையுடன் இருந்ததாகவும், நிறைய வெரைட்டிகள் செய்தாலும் அசத்தலாக 2 செய்திருக்கலாம் என்றும் விஜய் சேதுபதி கமெண்ட் கொடுத்தார். பின்னர் விஜய் சேதுபதி தனது பாணியில் அணைத்தும், வாழ்த்து சொல்லியும், கைகளில் முத்தமிட்டும் அன்பை பரிமாறினார்.