தமிழக அரசு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுப்பட்டது. இதையடுத்து திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், திரையரங்குகளும் மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் சூழல் ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகு, அரசு தரப்பில் ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டது. இதில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன், பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து இயங்க அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு தமிழில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 50 சதவீதமாக இருக்கும் தியேட்டர்கள் இருக்கை திட்டம், படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதற்கிடையில் தற்போது தமிழக அரசின் தரப்பில் இருந்து, ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், ஜனவரி 31-ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில் திரையரங்குகள் குறித்த அறிவிப்பு இல்லாததால், 50 சதவீத இருக்கை அமைப்புடனேயே கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கூறப்படுகிறது. இந்த அறிக்கையின்படி, மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் உட்பட ஜனவரி மாதம் ரிலீஸாகும் அனைத்து படங்களும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.