தனது அம்மா ஷோபாவுடன் விஜய் எடுத்த வின்டேஜ் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
![விஜய் அம்மாவுடன் எடுத்த போட்டோ | Master actor vijay's vintage click with his mother shoba விஜய் அம்மாவுடன் எடுத்த போட்டோ | Master actor vijay's vintage click with his mother shoba](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/master-actor-vijays-vintage-click-with-his-mother-shoba-home-mob-index-1.jpg)
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் இளயவதில் இருந்தபோது அவரின் அம்மா ஷோபாவுடன் எடுத்த கொண்ட வின்டேஜ் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்போதே மிக ஸ்டைலான காஸ்ட்யூமுடன் கூலாக நிற்கும் விஜய்யின் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், ''பார்த்தீங்களா., எங்க தளபதி Swag-அ..'' என கமன்ட் போட்டு கலக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.