தியேட்டர்கள் இல்லைன்னாலும் தினமும் தளபதி தரிசனம் - ஆல் ஏரியாவிலும் விஜய் கில்லிதான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இதற்கு பலியாகியுள்ளனர். இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, அனைவரும் வீட்டினுள் முடங்கி கிடக்கின்றனர். இப்போது மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக இருப்பது செல்ஃபோனும் டிவியும்தான். இந்த நேரத்தில் டிவி சேனல்கள் எல்லாம் போட்டி போட்டு கொண்டு புதிய படங்களை ஒளிபரப்பி டி.ஆர்.பியை ஏற்றிக்கொள்ளும் முயற்சியில் இருக்க, சத்தமே இல்லாமல் விஜய் ஆல் ஏரியாவிலும் தனது வாத்தி ரெய்டை நடத்தி வருகிறார். 

கடந்த மார்ச் 15 அன்று கத்தி, புலி படங்கள் ஒளிபரப்பாக விஜய்யின் இந்த ரன்னிங் ஆரம்பமானது. இதை தொடர்ந்து ஃப்ரென்ட்ஸ், துள்ளாத மனமும் துள்ளும், செந்தூரப்பாண்டி என விஜய்யின் க்ளாசிக் படங்கள் டிவி சேனல்களை நிரப்பின. அடுத்து புதிய கீதை, நண்பன், சிவகாசி, சுறா என விஜய்யின் கமர்ஷியல் ஹிட்ஸ் பக்கா என்டர்டெயின்ட்மென்ட்டாக அமைந்தது. மேலும் விஜய்யின் சூப்பர் கூல் சச்சினும், வின்டேஜ் மாண்புமிகு மாணவன் படமும் ஒளிபரப்பாகி செம ட்ரீட் கொடுத்தன. 

இப்படி விஜய் படங்கள் சேனல்களை நிரப்பி கொண்டிருந்த நேரத்தில், அண்ணன் வந்தா ஆட்டோ பாம் என்கிற கணக்கில், விஜய்யின் ஆல் டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான கில்லி சன் டிவியின் ப்ரைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பானது. 15 வருடங்களுக்கு பிறகு ஒரு படம் 6.30 மணி ப்ரைம் ஸ்லாட்டில் போடுப்படுகிறது என்றால், விஜய்யின் க்ரேஸை என்னவென்று புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் கில்லி ஓடி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் துப்பாக்கி, வசீகரா என ரிமோட்டுக்கு செம வேலை கொடுத்தது விஜய்யின் படங்கள்.  கில்லியின் சூடு இறங்குவதற்குள் காவலன், நெஞ்சினிலே, லவ் டுடே, நினைத்தேன் வந்தாய், பூவே உனக்காக என அடுத்தடுத்து விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள்தான் டிவிக்களில். 

அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் க்ளாசிக் ஹிட் திருப்பாச்சியும், ரீசன்ட் ஹிட் மெல்சலும் ஒளிபரப்பாகிறது. கிட்டத்தட்ட விஜய் நடித்த 63 படங்களில் 22 படங்கள் ஏற்கனவே ஒளிபரப்பாகிவிட்டன. இனி இருக்கும் இந்த ஊரடங்கு நேரத்தில் மீதம் இருக்கும் படங்களும் கண்டிப்பாக டெலிகாஸ்ட் செய்யப்படத்தான் போகிறது. ஒரு நடிகருக்கு தியேட்டர்களிலல் மாஸ் ஓப்பனிங், ப்ளாக்பஸ்டர் வசூல் என்பதை எல்லாம் தாண்டி, அவர் மக்கள் மனதில் நீண்ட காலம் பயணிக்கும் ரிபீட் வேல்யூ உள்ளவரா என்பது மிகவும் முக்கியம். அப்படி பார்க்கையில், இன்னும் தனது க்ளாசிக் படங்களால் அனைத்து டிவி சேனல்களிலும் வாத்தி ரெய்டு நடத்தி வரும் விஜய், இன்று மட்டுமல்ல, அன்றும் இன்றும் என்றும் மக்களின் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் மாஸ்டர்தான். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தியேட்டர்கள் இல்லைன்னாலும் தினமும் விஜய் தரிசனம்தான் | master actor vijay's movies telecast in tv channels in coronavirus locked down time

People looking for online information on Coronavirus, Gilli, Master, Vijay will find this news story useful.