நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டு வெளியாகவிருந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் விஜய் நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். அப்போது திரையரங்குகளில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை, 100 சதவீதமாக மாற்ற வேண்டி அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் அமைச்சர் வேலுமணியும் உடன் இருந்துள்ளார்.
இதை தொடர்ந்து, பாசிட்டீவான பதிலை முதலமைச்சர் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிரகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.