நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா கல்யாணத்துக்கு பிறகு எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் ஃபாசில் இயக்கிய கண்ணுக்குள் நிலவு படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. கல்யாணம் ஆன புதிதில் விஜய் மற்றும் சங்கீதா படப்பிடிப்பில் மாலையுடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.