அர்ஜுன் தாஸ்-ன் அந்தகாரம் படத்துக்கு குரல் கொடுத்த மாஸ்டர் நடிகர்.!! அட.. இதை நோட் பண்ணீங்களா.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அர்ஜுன் தாஸ் நடித்த அந்தகாரம் திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் அர்ஜுன் தாஸ். கார்த்தி நடித்த கைதி படத்தில் வில்லனாக நடித்து இவர் பிரபலமானார். இவரின் கணீர் குரல் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இதனிடையே நேற்று அர்ஜுன் தாஸ் நடித்த அந்தகாரம் திரைப்படம் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அந்தகாரம் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. 

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மருத்துவர் இந்திரன் கதாபாத்திரத்தின் ஆபரேஷனுக்கு பிறகு வரும் குரலுக்கான டப்பிங்கையும் அர்ஜுன் தாஸே கொடுத்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்ததுடன், இன்னுமொரு கேரக்டருக்கும் டப்பிங் செய்து அசத்தியுள்ளார் இந்த மாஸ்டர் நடிகர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

அந்தகாரம் படத்தில் மாஸ்டர் நடிகரின் பங்கு | master actor dubbed for this role in arjun das andhaghaaram movie

People looking for online information on Andhaghaaram Tamil, Arjun Das, Vijay will find this news story useful.