BOX OFFICE: மூன்றே நாளில் செம மாஸ் காட்டிய புஷ்பா திரைப்படம்! வெளியான OFFICIAL தியேட்டர் வசூல் நிலவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான 'புஷ்பா: தி ரைஸ்'  டிசம்பர் 17-ஆம் தேதி வெளியானது. 'புஷ்பா: தி ரைஸ்' 2021-ஆம் ஆண்டின் மிகப்பெரிய படமாகும்.

Advertising
>
Advertising

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இதனை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 4.08 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக புஷ்பா உருவெடுத்தது. சென்னை சிட்டியில் - 40 லட்சமும், செங்கல்பட்டு ஏரியாவில் - 1.30 கோடியும்,  கோயமுத்தூர் ஏரியாவில் - 67 லட்சமும், மதுரை- ராம்நாடு பகுதியில் - 33 லட்சமும், திருச்சி - தஞ்சாவூர் பகுதியில் - 31 லட்சமும், சேலம் பகுதியில் - 32 லட்சமும், வட & தென் ஆற்காடு பகுதியில் - 55 லட்சமும், திருநெல்வேலி  & கன்னியாகுமரி பகுதியில் - 20 இலட்சமும், தமிழகம் முழுவதும் - 4.08 கோடி ரூபாயை வசூலித்தது, புஷ்பா திரைப்படம்.  இரண்டாவது நாளில் புஷ்பா திரைப்படம் இரண்டாவது நாளில் 3 கொடியே 51 லட்ச ரூபாயை தியேட்டரில் வசூலித்துள்ளது. இந்த வசூலானது முதல்நாளில் ஆன வசூலில் 80% சதவீதம் ஆகும். முதல் இரண்டு நாளில் தமிழகத்தில் மட்டும் 7.59 கோடி ரூபாயை வசூலித்துள்ளது புஷ்பா திரைப்படம். மூன்றாவது நாளில் தமிழகத்தில் 4.49 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் மூன்று நாளில் தமிழகத்தில் மட்டும் 12.08 கோடி ரூபாயை வசூலித்துள்ளது புஷ்பா திரைப்படம்.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்கும் முறையே 'அலா வைகுந்தபுரமுலோ' மற்றும் 'ரங்கஸ்தலம்' ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு 'புஷ்பா: தி ரைஸ்' வெளியானது. 'அலா வைகுந்தபுரமுலோ' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது அதனை புஷ்பா படமும் தக்கவைத்துள்ளது. அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

MASSive 173 CR 3 days Gross Worldwide for Pushpa The Rise

People looking for online information on 173 CR 3 days Gross Worldwide for Pushpa The Rise, புஷ்பா வசூல், Box office, Day 1, Pushpa Box Office, Pushpa Movie Box Office Collections, Pushpa Movie Collections will find this news story useful.