கமல்ஹாசன் கொரோனா பாதித்ததை அடுத்து அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு உடல்நலம் தேறிவருகிறார். இதனைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சியை வழிநடத்தி, தொகுத்துவழங்கி வருகிறார்.
இதனிடையே இந்த வார கேப்டன்ஸி டாஸ்கில் இமான் அண்ணாச்சி ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ நிகழ்ச்சியில் பெட்டிகளை சரியாமல், சரியாக அடுக்கி வைத்து, கேப்டன்சி டாஸ்கில் வென்றார். ஆனால் நிரூப், தன் காயினின் ஆற்றலை பயன்படுத்தி இமான் கேப்டனாகும் வாய்ப்பைத் தடுத்து, 2-வது முறை நிரூப் கேப்டன் ஆனார்.
இந்நிலையில் நிரூப், பிக்பாஸ் போட்டியாளர் ஒவ்வொருவரின் முகத்தை பார்த்தும் பேசும்போது, அவரவர் விழிமட்டத்துக்கு கொஞ்சம் உயரத்தை தாழ்த்தி கண்ணோடு கண் பார்த்து பேச பேண்டும். இதனை நிரூப் பொதுவாக அனைவரையும் பார்த்து பேசும்போது வருண் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.
ஆனால் நிரூப் கேட்கவில்லை. அதற்கு மாறாக, “பிக்பாஸிடம் நான் பேசிக்கொள்கிறேன். ஒருவரை மட்டும் குறிப்பிட்டு பார்த்து பேசும்போது தான் அப்படி பேச முடியும். நான் அப்படி செய்துகொள்கிறேன்” என்றார். அதற்கு பிரியங்காவும், நிரூப்புக்கு சப்போர்ட் பண்ணி பேசினார்.
ஆனால் பிக்பாஸ் இடைமறித்து, நிரூப்பிடம், “நிரூப், ஒவ்வொருவரின் விழிமட்டத்துக்கு இறங்கி பேசுங்கள்” என்றதும், உயரமாக இருக்கும் நிரூப், சற்றே கால்முட்டியை தாழ்த்தி நின்று பேசினார். இதனால் அவர் சிரமப்பட்டதை உணர்ந்த அக்ஷரா, தீடீரென எழுந்து நின்ற அக்ஷரா, “இப்போது என்னை பார்த்து பேசு. என் கண்ணை பார்த்து பேசு” என்று ஆச்சர்யமூட்டினார்.
அவரைத் தொடர்ந்து தாமரையும் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். அபிஷேக் ஒரு படி மேலே போய், சோபா மேல் ஏறி நின்று, “இப்போது என்னை பார்த்து பேசுடா நீ” என்றார். உடனே நெகிழ்ந்த நிரூப், “தேங்க் யூ கய்ஸ்.. ” என்றார். சண்டை சச்சரவுகள் இருந்தாலும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடையே இருக்கும் அன்பையும் ஒற்றுமையையும் இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது.